தற்போதைய செய்திகள்

நிவர் புயலை எதிர்கொள்ள இந்திய காவல்படை, கடலோர காவல்படை தயார்

25th Nov 2020 09:34 AM

ADVERTISEMENT

நிவர் புயலால் எற்படும் விளைவுகளை சமாளிக்கவும், பேரிடர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் கடலோர காவல்படையும், இந்திய கடற்படையும் தயார் நிலையில் உள்ளன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ புயல் புதன்கிழமை (நவ.25) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம் மற்றும் கடலூா் துறைமுகத்தில் புதன்கிழமை காலை 6.30 மணியளவில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. 

நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக கடலோர மாவட்டங்களான விழுப்புரம், கடலூா், செங்கல்பட்டு, தஞ்சாவூா், நாகை, திருவாரூா், புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடலோர காவல்படையின் நான்கு கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தேவையான அவசரகால உதவியை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கடலோர காவல்படையின் இரண்டு டோர்னியர் விமானங்கள் தயார் நிலையில் விசாகப்பட்டினத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. கப்பல்படையின் ஐ.என்.எஸ். ஜோதி என்ற கப்பல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளது. இந்த கப்பலில் பாதுகாப்பு உபகரணங்களும், டைவிங் குழுக்களும் கப்பலில் உள்ளன.

ADVERTISEMENT

நாகப்பட்டினம், ராமேசுவரம் மற்றும் ஐ.என்.எஸ். பருந்துவில் வெள்ள நிவாரண குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சென்னையில் 5 வெள்ள நிவாரண மீட்பு குழுக்கள், ஒரு ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் குழு தயார் நிலையில் உள்ளன.

Tags : Cyclone Nivar
ADVERTISEMENT
ADVERTISEMENT