தற்போதைய செய்திகள்

நிவர் புயல்: தமிழகம், புதுச்சேரிக்கு உதவ தயார் - ராணுவம் அறிவிப்பு

25th Nov 2020 08:51 AM

ADVERTISEMENT

 

நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரியில் பாதிப்பு  ஏற்பட்டால் உதவுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நிவா்’ புயல் புதன்கிழமை (நவ.25) மாலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, புதுச்சேரி பழைய துறைமுகம் மற்றும் கடலூா் துறைமுகத்தில் புதன்கிழமை காலை 6.30 மணியளவில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. 

இந்நிலையில், நிவர் புயலால் தமிழகம், புதுச்சேரியில் பாதிப்பு  ஏற்பட்டால் உதவுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT

இதற்காக 12 மீட்புக்குழுக்கள், 2 தொழில்நுட்பக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT