தற்போதைய செய்திகள்

நிவர் புயல்: கொல்லிமலையில் தயார் நிலையில் தீயணைப்பு துறையினர்

25th Nov 2020 11:44 AM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நிவர் புயல் எதிரொலியாக கொல்லிமலை தீயணைப்பு துறையினர் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நிவர் புயல் எதிரொலியாக அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அதிகப்படியான பனிமூட்டமும், சாரல் மழையும் கடந்த சில நாள்களாக பெய்து வருகிறது. இங்கு நிவர் புயல் பாதிப்பு எதிரொலியாக தீயணைப்பு வீரர்கள் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். 

மேலும் பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய சுற்றுலா இடங்களில் இரு நாள்களாக விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆகாயகங்கை அருவிக்கு செல்ல புதன்கிழமை ஒரு நாள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT