தற்போதைய செய்திகள்

நிவர் புயல்: தருமபுரியில் கட்டுப்பாட்டு அறை அமைப்பு

25th Nov 2020 01:48 PM

ADVERTISEMENT


தருமபுரி: நிவர் புயல் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தருமபுரியில் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ச.ப.கார்த்திகா தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் இயங்கும் பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறையை நேரில் பார்வையிட்டு ஆட்சியர் ச.ப.காத்திகா ஆய்வு செய்தார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  

‘நிவர் புயல் கரையை கடந்து செல்லும் பாதையில் திருவண்ணாமலை மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் எல்லையோரம் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங், சிக்கலூர் உள்ளிட்ட 6 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளது.  இந்த பகுதிகளில் புயலின் தாக்கம் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

கோட்டப்பட்டி பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் தொடர்ந்து இப்பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பேரிடர் மீட்பு பணிகளில் பயிற்சிபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்டுப்பணி வீரர்கள் மற்றும் 20 காவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.  

பாதிப்புகள் ஏற்பட்டால் மக்களை மீட்டு தங்கவைக்க அரசுபள்ளிகள், சமுதாய கூடங்கள் தயார்நிலையில் உள்ளது. 

முகாமில் தங்கவைக்கப்படும் பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் உணவு வழங்க வருவாய்த்துறையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இதே போல் புயல் தொடர்பான தகவல்களை அவ்வப்போது தொடர்புகொள்ள 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை 1077 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Tags : Cyclone Nivar control room system
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT