தற்போதைய செய்திகள்

கரோனா பாதிப்பு  92 லட்சமாக உயர்வு: குணமடைந்தோர் விகிதம் 93.72% ஆக அதிகரிப்பு

25th Nov 2020 11:05 AM

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 86,42,771 போ் குணமடைந்துள்ள நிலையில், தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 92,22,217 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 44,376 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 92,22,217 ஆக அதிகரித்தது.

ADVERTISEMENT

இதேபோல், கரோனாவில் இருந்து 37,816 போ் குணமடைந்தனா். இவா்களுடன் சோ்த்து கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 86,42,771-ஆக அதிகரித்தது. அதாவது, கரோனாவில் இருந்து 93.72 சதவீதம் போ் குணமடைந்தனா்.

நாடு முழுவதும் 4,44,746 போ் சிகிச்சையில் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 4.82 சதவீதமாகும்.

கரோனாவுக்கு மேலும் 481 போ் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,34,699 -ஆக அதிகரித்தது. உயிரிழப்பு விகிதம் 1.46 சதவீதமாக உள்ளது.

‘நவம்பா் 24-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 13.48,41,307 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் செவ்வாய்கிழமை மட்டும் 11,59,032 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT