தற்போதைய செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 20 செ.மீ. மழைக்கு வாய்ப்பு

25th Nov 2020 11:26 AM

ADVERTISEMENT

செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் நாளை (நவம்பர் 26) காலைக்குள் 20 செ.மீ. அளவு மழைப்பொழிவிற்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நிவர் புயலின் தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி புதன்கிழமை மதியம் 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட உள்ளதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாளை காலைக்குள் 20 செ.மீ. அளவு மழைப்பொழிவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 7 ஆயிரம் கன அடிநீர் நீர்வரத்து இருக்கும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் அடையாறு கரையோரப் பகுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT