தற்போதைய செய்திகள்

துறைமுகங்களில் எச்சரிக்கை புயல்கூண்டு ஏற்றம்

DIN


காரைக்கால்: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் காரணமாக காரைக்கால் துறைமுகத்தில் திங்கள்கிழமை காலை 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

காரைக்கால் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு கடலுக்குள் சென்ற விசைப்படகுகள் திரும்பி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் கரைக்குத்  திரும்பிக்கொண்டிருப்பதாகவும் விசைப்படகு மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கடலூர்: கடலூர் துறைமுகத்தில் இன்று காலையில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மீன் பிடிப்பதற்காகக்  கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி:  தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் திங்கள்கிழமை 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை தொடர்பாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், மீனவர்களை எச்சரிக்கும் வகையிலும் திங்கள்கிழமை 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT