தற்போதைய செய்திகள்

அஸர்பைஜானில் கொண்டாட்டம்

20th Nov 2020 12:46 PM

ADVERTISEMENT

ஆர்மீனியாவிடமிருந்து நகோர்னோ - காராபாக் பகுதி மீட்கப்பட்டதை அஸர்பைஜான் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்த நகோர்னோ - காராபாக் மோதலில், செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கிய  போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

நகோர்னா - காராபாக் பிராந்தியம், அஸர்பைஜான் நாட்டைச் சேர்ந்தது என்ற போதிலும், 1994 ஆம் ஆண்டிலிருந்து ஆர்மீனியப் படையினரின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது.

நகோர்னோ - காராபாக் பகுதியில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நவம்பர் 10 ஆம் நாள், ரஷியாவின் முன்னெடுப்பில் அமைதி உடன்பாடு ஒன்றில் ஆர்மீனியா, அஸர்பைஜான், ரஷியா அதிபர்கள் கையெழுத்திட்டனர்.

ADVERTISEMENT

அஸர்களின் பாரம்பரிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்த, முக்கியத்துவம் வாய்ந்த ஷுஷா நகரை அஸர்பைஜான் மீண்டும் கைப்பற்றியதால், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்  ஒரு முடிவுக்கு வந்தது.

"ஷுஷா நம்முடையது, காராபாக் நம்முடையது, காராபாக் அஸர்பைஜானுடையது" என்று முழக்கமிட்டார் அஸர்பைஜான் அதிபர் அலாம் அலியேவ்.

இந்த உடன்பாட்டை அஸர்பைஜான் தலைநகர் பாகுவில் வீதிகளில் திரண்டு மக்கள் கொண்டாடினர்.

அஸர்பைஜான் படை வீரர்களால்  மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ள பகுதிகளில் கட்டமைப்புகளை மீட்டுருவாக்குவதற்கான திட்டத்தையும் அதிபர் அலியேவ் அறிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT