தற்போதைய செய்திகள்

வாணியம்பாடிக்குப் புதிய ஆணையர்: பழக்கடைகளை அடித்து சேதப்படுத்தியவர் மாற்றம்

13th May 2020 09:11 PM

ADVERTISEMENT

 

வாணியம்பாடி: வாணியம்பாடியில் பழக்கடைகளைச் சேதப்படுத்தி பழங்களைக் கீழே வீசிய சம்பவத்தைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் மாற்றப்பட்டார்.

வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் ஆய்வின்போது பழக்கடைகளில் பழங்களைக் கீழே தள்ளியும், தள்ளுவண்டியை பழங்களுடன் கவிழ்த்துவிட்ட செயல்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்தது.

இந்த நிலையில் மேல்விசாரம் ஆணையராக (பொறுப்பு) பணியாற்றிவரும் பாபு,  வாணியம்பாடி நகராட்சிக்கு புதிய ஆணையராக (பொறுப்பு) இடமாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

சர்ச்சைக்குரிய ஆணையர் சிசில் தாமஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

Tags : vaniambadi
ADVERTISEMENT
ADVERTISEMENT