தற்போதைய செய்திகள்

பவானி அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய கூலித் தொழிலாளி பலி

8th May 2020 02:28 PM

ADVERTISEMENT

 

பவானி: பவானி அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்திய கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

பவானி அருகே உள்ள சிங்கம்பேட்டை பொதியன் துண்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் மா. ராஜ்குமார் (28). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரியங்கா, 7 வயதில் மகள்,  3 வயதில் ஒரு மகன் உள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள மதுக் கடைக்குச் சென்று ராஜ்குமார் மதுபாட்டில்களை வாங்கியதோடு தொடர்ந்து மது அருந்தியுள்ளார்.

ADVERTISEMENT

ஒன்றரை மாத இடைவெளிக்குப் பின்னர் அதிக அளவில் மது அருந்தியதால் மயக்க நிலைக்குச் சென்றார். இதைக் கண்ட உறவினர்கள் ராஜ்குமாரை மீட்டு பூதப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது ராஜ்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுக்கடை திறக்கப்பட்ட ஒரு நாளில் அதிக மது அருந்திய கட்டிடத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் இந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT