தற்போதைய செய்திகள்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி மறைவு

2nd May 2020 01:55 PM

ADVERTISEMENT

 

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசனுடைய மனைவி கண்ணாத்தாள் (67) காலமானார்.

திண்டுக்கல் நாகல் நகரில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை  காலையில் காலமானார். கண்ணாத்தாள் மறைவு குறித்த தகவல் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த அமைச்சர் சீனிவாசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சென்னையிலிருந்து திண்டுக்கல் புறப்பட்டார். இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் எனக் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : obit
ADVERTISEMENT
ADVERTISEMENT