தற்போதைய செய்திகள்

வேளாளர் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1.85 கோடி கல்வி உதவித்தொகை அளிப்பு

16th Mar 2020 09:44 PM

ADVERTISEMENT

 

ஈரோடு: வேளாளர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி சார்பில் ரூ.1.85 கோடி கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டது.

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியின் சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்காக 2019-2020ஆம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட பொறியியல் படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, இலவசக்கல்வி மற்றும் கட்டணச்சலுகை பெற்ற 185 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.85 கோடி கல்வி உதவித்தொகை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

விழாவில் கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் பேசுகையில், இலவசக் கல்வித் திட்டத்தில் பயன்பெற்ற மாணவ-மாணவியர் திறமையாகப் படித்து சமுதாயத்தில் அங்கீகாரம் பெற்றவராக உருவாக வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

விழாவில் சக்திதேவி அறக்கட்டளை சார்பில் வேளாளர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த 25 ஏழை மாணவ-மாணவியர்களுக்கு படிப்பிற்கான முழு கட்டணமும் வழங்கப்பட்டது.

இந்தக் கல்வி ஆண்டில் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றமைக்காக ஆங்கில வார இதழ் வெளியிட்ட தரவரிசைப்பட்டியலில் தமிழக அளவில் தொடர்ந்து தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாகத் திகழ்வதையும், அண்ணா பல்கலைக்கழகத்தால் நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்றமைக்காகவும் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களை தாளாளர் பாராட்டினார்.

வரும் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான இலவசக் கட்டணம் மற்றும் கட்டணச் சலுகைக்கான மாநில அளவிலான தேர்வு கல்லூரி வளாகத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவு அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர்கள் தேர்வில் பங்கேற்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT