தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 13, 2020

13th Mar 2020 05:25 PM

ADVERTISEMENT

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான காவல் விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலையான தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில்  செய்தியாளர்களுடன் பேசினார். உடன் அவருடைய மனைவி மோலி அப்துல்லா, மகள் சபியா அப்துல்லா.

சௌதி அரேபியாவிலுள்ள முஸ்லிம்களின் புனித நகரான மெக்காவில் பெரிய மசூதியிலுள்ள காபாவைச் சுற்றித் தரைத்தளத்தில் கிருமிநாசினியைத் தெளிக்கும் தொழிலாளர்கள். கரோனா அச்சம் காரணமாகப் புனித நகருக்கு யாரும் வர வேண்டாம் என சௌதி அறிவித்துவிட்டது.

ADVERTISEMENT

கரோனா அச்சம் காரணமாக ஈரானிலிருந்து  அழைத்து வரப்பட்ட இந்தியர்கள்  அனைவரும் மும்பையில் கட்கோபரிலுள்ள தனிமை முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

மும்பையில் சான்டாகுரூஸிலுள்ள தொழிற்சாலையொன்றில் உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் மேலாண்மைத் துறையினர் சோதனை நடத்தியபோது, பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலியான கிருமி நாசினிகள் கைப்பற்றப்பட்டன.

மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோவிலில் கரோனா அச்சத்தால் முகக் கவசங்கள் அணிந்தபடி பூஜை செய்யும் பூசகர்கள்.

வெளிநாடுகளிலிருந்து வந்து கரோனா அச்சம் காரணமாகத் தனிமையில் தங்க வைக்கப்பட்டிருந்த 36 அயல்நாட்டவர்கள் உள்பட 112 பேர், மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் அவர்கள் பாதிக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று முகாமிலிருந்து வெளியேறினர்.

Tags : news-photos
ADVERTISEMENT
ADVERTISEMENT