தற்போதைய செய்திகள்

மேலும் பல குடும்பங்கள் பிரியமானவர்களை இழக்க நேரிடலாம்: பிரிட்டிஷ் பிரதமர் உருக்கம்

13th Mar 2020 02:36 PM

ADVERTISEMENT

 

நாட்டில் மேலும் பல குடும்பங்கள் தங்களுக்குப் பிரியமானவர்களை இழக்க நேரிடலாம் என மிக உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்.

பிரிட்டனில் கரோனா வைரஸை எதிர்கொள்வது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, லேசான சளி, காய்ச்சல் என்றாலும் ஒரு வாரத்துக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று நாட்டு மக்களை  பிரிட்டிஷ் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

பிரிட்டனில் இதுவரை கரோனா வைரஸ் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். 596 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ADVERTISEMENT

பிரிட்டனில் பத்தாயிரம் பேர் வரைகூட இந்த நோய்த் தொற்று இருக்கக் கூடும், ஆனால் வெளிப்படையாக எதுவும் தெரியவில்லை என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

அயர்லாந்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்ட நிலையிலும் பிரிட்டனில் திறந்திருக்கலாம் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார். திறந்திருப்பதைவிட பள்ளிகள் மூடப்படுவதால் மேலும் மோசமான விளைவுகளே ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஜான்சன்.

ஒரு தலைமுறையின் மிக மோசமான மருத்துவச் சிக்கல் கரோனா என்று குறிப்பிட்டுள்ள ஜான்சன், இது மேலும் பரவக் கூடும் என்று எச்சரித்ததுடன், தடுப்பதற்கான புதிய நடவடிக்கைகளையும் அறிவித்தார்.

நாட்டு மக்களுக்கு கரோனாவை எதிர்கொள்வது பற்றி அழைப்பு விடுத்துள்ள ஜான்சன், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT