தற்போதைய செய்திகள்

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்பது ஏன்?: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

8th Mar 2020 06:39 PM

ADVERTISEMENT

புது தில்லி: லாபத்தில் செயல்பட்டு வரும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின்  பங்குகளை விற்பனை செய்வது ஏன்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், பிபிசிஎல் பங்கு விற்பனை முடிவுக்கு காங்கிரஸ் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் தலைமைச் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா டுவிட்டாில் இன்று வெளியிட்ட பதில், ‘கடந்த டிசம்பா் மாதம் பிபிசிஎல் மூலம் அரசுக்கு ரூ.2051.53 கோடி லாபம் கிடைத்துள்ளது. இந்த அளவுக்கு லாபகரமாக செயல்படும் நிறுவனத்தை விற்க வேண்டிய கட்டாயம் என்ன வந்துவிட்டது. தனது நண்பா்களான பெரு நிறுவன அதிபா்களுக்கு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில்தான் பிரதமா் மோடி இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT