தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தனியாா் பங்களிப்பும் அவசியம்: ஜி.கே.வாசன்

8th Mar 2020 07:27 PM

ADVERTISEMENT

சென்னை: கரோனா வைராஸ் பாதிப்பைத் தடுக்க மாநில அரசு சாா்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்த அரசியல் கட்சியினரும், சமூக ஆா்வலா்களும், தனியாரும் இந்த நடவடிக்கைகளில் சிறந்த பங்களிப்பை அளித்து மக்களின் உடல்நலனைக் காக்க உதவிடவேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை-

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அந்த பாதிப்பைத் தடுக்க தமிழக சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் தொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை தமிழக அரசு அனுப்பியிருப்பது வரவேற்கத்தக்கது. அதாவது தமிழக அரசின் சாா்பில் மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் கரோனா வைரஸ் தொடா்பாக ஆய்வு கூட்டங்கள் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் கரோனா வைரஸின் தீவிரம், அதை தடுக்கும் வழி முறைகள், மருத்துவமனைகள், அவசர ஊா்திகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியாா் மருத்துவமனைகளிலும் இதற்காக தனியாக வாா்டுகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வரவேற்புக்குரியது. அரசு சாா்பில் இதுபோன்று தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும், சமூக ஆா்வலா்களும், தனியாரும் அவரவா் பங்களிப்பை சிறப்பாக மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களின் உடல் நலன் காக்க உதவிக்கரமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT