தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 2, 2020

2nd Mar 2020 03:52 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் மேம்பாட்டு ஆணையத்தால் நகர் வளர்ச்சிக்கென நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரை சமாதிப்  போராட்டத்தில் ஈடுபட்ட நிந்தர் கிராமத்து மக்கள்.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் நேதாஜி அரங்கத்தில் நடந்த மத நல்லிணக்க நிகழ்ச்சியொன்றில் கைகோத்த அனைத்து மதத் தலைவர்கள்.

ADVERTISEMENT

தில்லி வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, புது தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்.

புது தில்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், திங்கள்கிழமை, புது தில்லி வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள்.

புது தில்லி வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலங்களவையில்  அவைத் தலைவர் இருக்கையைச் சுற்றிவளைத்துப் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.

பிகாரில் பாட்னா நகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய பாட்னா மதிய உணவுத் தொழிலாளர்கள்.

ஜப்பானில் டோக்கியோவிலுள்ள ஷினாகாவா  ரயில் நிலையத்தில் கரோனா வைரஸுக்குப் பயந்து முகக் கவசம் அணிந்து வந்த பயணிகள்.

துருக்கி -  கிரேக்க எல்லையில் பஜார்கூல் எல்லைப் பகுதியில் கிரேக்கத்தில் நுழைவதற்காகக் காத்திருக்கும் பயணிகள்.  ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்புவோருக்குத் தங்கள் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று துருக்கி அறிவித்துவிட்ட நிலையில் கிரேக்கத்தில் நுழைவதற்காக எல்லைகளில் ஏராளமான அகதிகள் குவிந்திருக்கின்றனர்.

கிழக்கு மத்திய தரைக்கடல் தீவு நாடான சைப்ரஸில் லிமாசோலில் நடைபெறும் விழா அணிவகுப்பில் பங்கேற்ற நடனப் பெண்கள்.

Tags : news photos
ADVERTISEMENT
ADVERTISEMENT