தற்போதைய செய்திகள்

வாலாஜாப்பேட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

27th Jun 2020 04:59 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வேட்டைக்கு பயன்படுத்தும்  நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி, 3 பேர் படுகாயமடைந்தனர்.

வாலாஜாபேட்டை அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நரிக்குறவினர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு பகுதியில் வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. 

இதில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த வீடு முழுவதுமாக வெடித்து சிதறியதில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த தமிழன், உழைப்பாளி, விஜய், ஆகிய 3 பேர் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

இதில் உழைப்பாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர். மேலும் சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைவர் பூரணி ஆகியோர் விபத்துக்குள்ளான இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Walajapet
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT