தற்போதைய செய்திகள்

அசாமுக்குத் தண்ணீர் விடுவது நிறுத்தமா? பூடான் மறுப்பு

26th Jun 2020 12:40 PM

ADVERTISEMENT

இந்திய எல்லையையொட்டி அசாம் அருகேயுள்ள கால்வாயில் தண்ணீர் விடுவதை பூடான் அரசு நிறுத்திவிட்டதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என்று பூடான் "திட்டவட்டமாக மறுத்துள்ளது" எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தண்ணீர் தடையின்றிச் செல்ல வசதியாகப் பழுதுபார்ப்பு வேலைகளைத்தான் செய்துகொண்டிருப்பதாக பூடான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்துக்குக் கால்வாயில் தண்ணீர் விடுவதை பூடான் நிறுத்திவிட்டதாக வெளியான செய்தி உண்மையல்ல என்று பூடான் தரப்பில் விளக்கப்பட்டிருக்கிறது. 

எல்லையோர பாசன வாய்க்காலில் அசாமிற்குத் தண்ணீர் விடுவதை பூடான் நிறுத்திவிட்டதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT