தற்போதைய செய்திகள்

சீர்காழியில் விவசாய குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள்

17th Jun 2020 06:56 PM

ADVERTISEMENT

 

சீர்காழி: சீர்காழி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர், வேளாண் கருவிகளை எம்.எல்.ஏ. பிவி.பாரதி இன்று (புதன்கிழமை) வழங்கினார்.

சீர்காழி வேளாண் உதவி இயக்குனர்(பொ) சி. சின்னண்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை மூலம் சீர்காழி வட்டாரத்தில் கூட்டு பண்ணையத் திட்டத்தில் விளந்திட சமுத்திரம், நிம்மேலி, திருவாலி, கீழசட்டநாதபுரம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ஐந்து லட்சம் வீதம் நான்கு குழுக்களுக்கும் இருபது லட்சம் மானியத்தில் டிராக்டர்களும், 50 சதவீதம் மானியத்தில் ஆயில் என்ஜின்களும், நுண்ணீர் பாசன திட்டத்தில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகளும், தென்னங்கன்றுகளும் விவசாயிகளுக்கு சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி.பாரதி பங்கேற்று வழங்கினார்.

விழாவில் விவசாயிகள் குழுக்களை சேர்ந்த திருமாறன், அப்துல்சத்தார், ராஜ்மோகன், ராஜதுரை அதிமுக நகர செயலாளர் பக்கிரிசாமி, பேரவை செயலாளர் மணி, வழக்குரைஞர்கள் மணிவண்ணன், நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT