தற்போதைய செய்திகள்

மினியாபொலிஸில் காவல்துறையே ஒழிக்கப்படுகிறது: பாதுகாப்புக்கு மக்கள் அமைப்பு

14th Jun 2020 07:12 PM

ADVERTISEMENT

 

மினியாபொலிஸ் மாநகரில் காவல்துறையையே ஒழித்துக்கட்டிவிட்டு மக்களே நடத்தும் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்துவதென மினியாபொலிஸ் நகர் கவுன்சில் ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

மினியாபொலிஸ் நகரில்தான் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட், வெள்ளையரான காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்திக் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் உலகின் பல நாடுகளிலும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் காவல்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் எவ்விதப் பலனுமில்லை என்பதை ஃபிளாய்ட் கொலை என்ற பெருந்துயரம் அம்பலப்படுத்தியுள்ளது என்றும் கவுன்சில் தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

ADVERTISEMENT

"காவல்துறை இல்லாமலேயே மக்களை, சமுதாயத்தை எவ்வாறு பத்திரமாகக் காப்பது என்பதற்கான பத்து அம்சத் திட்டத்தின் தொடக்கத்தை இப்போது எழுதத் தொடங்குவோம். ஏனெனில், காவல்துறை தோற்றுப் போய்விட்டது" என்று கவுன்சில் உறுப்பினர்களில் ஒருவரான ஜெர்மையா எல்லிசன் தெரிவித்துள்ளார்.

காவல்துறைக்கான நிதி பிற தேவைகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் காவல்துறையை  அகற்றுவது பற்றி கவுன்சிலில் முடிவு செய்யப்படும் என்று கவுன்சில் தலைவர் லிசா பென்டர்  அறிவித்த ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கும் வகையில் புதிய வகையிலான பாதுகாப்பு அமைப்பு வரும் ஆண்டில் உருவாக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags : George Floyd ஜார்ஜ் ஃபிளாய்ட் Minneapolis City Council replace the Police department public security system மினியாபொலிஸ் காவல்துறை ஒழிப்பு மக்கள் பாதுகாப்பு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT