தற்போதைய செய்திகள்

தில்லி மருத்துவமனைகளில் தில்லிக்காரர்களுக்கு மட்டுமே அனுமதி: கேஜரிவால்

7th Jun 2020 02:53 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசு மருத்துவமனைகளைத் தவிர தில்லியிலுள்ள மருத்துவமனைகள் அனைத்திலும் தில்லி மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா நோயாளிகள் அதிகரித்துவரும் நிலையில், தில்லியிலுள்ள தனியார் மருத்துவமனைகளிலும்கூட  தில்லியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நாட்டில் வேறெங்குமே கிடைக்காத சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய கேஜரிவால், மேலும் தில்லியில் திங்கள்கிழமையிலிருந்து உணவகங்கள், மால்கள். மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன என்றும் தில்லியின் எல்லைகளும் திறந்துவிடப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஒருவேளை கரோனா நோயாளிகளைத் தங்கவைக்கத் தேவைப்படலாம் என்பதால் விடுதிகள் மற்றும் அரங்கங்கள் எதுவும் திறக்கப்படவில்லை என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT