தற்போதைய செய்திகள்

ஒடிசா, மேற்கு வங்க மக்களிடையே வரும் 8, 9 ஆம் தேதிகளில் இணையவழி பேசுகிறார் அமித் ஷா

7th Jun 2020 03:14 PM

ADVERTISEMENT

 

ஒடிசா மற்றும் மேற்கு வங்க மக்களிடையே இணையவழி பொதுக்கூட்டங்களில் ஜூன் 8, 9 தேதிகளில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றுகிறார்.

இதனிடையே, நாளை திங்கள்கிழமை குஜராத் மக்களிடையே பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவும் மகாராஷ்டிர மக்களிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் உரையாற்றுகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பிகார் மக்களிடையே இணையவழிப் (யூ டியூப், முகநூல்) பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT