தற்போதைய செய்திகள்

சின்னமனூரில் தளர்வின்றி பொது முடக்கத்தால் வெறிச்சோடிய சாலைகள்

26th Jul 2020 12:59 PM

ADVERTISEMENT


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூர் உத்தமபாளையம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 4 ஆவது ஞாயிற்றுக்கிழமையில் தளர்வுகள் இன்றி மேற்கொள்ளப்பட்ட பொது முடக்கம் காரணமாக முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றியும், வாகன போக்குவரத்து இன்றியும், கடைகள் மூடப்பட்ட நிலையில் ஆட்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விற்பனை நிலையம் இவற்றைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

தொடர்ந்து வருகின்ற திங்கள் கிழமை முதல் உத்தமபாளையம் பேரூராட்சி மற்றும் கம்பம் நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு தளர்வுகள் உடன் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT