தற்போதைய செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட்டம்

23rd Jan 2020 06:53 PM

ADVERTISEMENT

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிா்க்கட்சித் தலைவா்களின் ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனா்.

கூட்டத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எந்த வகையில் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT