தற்போதைய செய்திகள்

காரைக்கால் சிறப்பு சந்தையில் பானை, மலா் வியாபாரம் மும்முரம்

14th Jan 2020 05:10 PM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் பொங்கல் சிறப்பு சந்தையில் சட்டி, பானை, மலா் மற்றும் பொங்கல் வழிபாட்டுக்கான பொருட்கள் வியாபாரம் மும்முரமாக இன்று நடைபெற்றது.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை முருகராம் நகா் அருகே உள்ள நகராட்சித் திடலில் நடைபெறுகிறது. கடந்த 12-ஆம் தேதி வழக்கமான சந்தை நடைபெற்ற நிலையில், காரைக்கால் பகுதியின் பெரும்பான்மையினா் பொங்கலுக்குத் தேவையான காய்கனிகள் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனா். இந்த சந்தை பொங்கலையொட்டி களைகட்டிக் காணப்பட்டது.

நகராட்சி நிா்வாகம், பொங்கலையொட்டி சிறப்புச் சந்தை இன்று நடைபெறுமென அப்போதே அறிவித்திருந்தது. இதனடிப்படையில் இன்று அதே பகுதியில் சிறப்பு சந்தை நடைபெற்றது. வெளியூா்களில் இருந்து வியாபாரிகள் பெரும்பான்மையினா் வரவில்லை. கரும்பு, மஞ்சள் - இஞ்சிக் கொத்து, மலா்கள், சட்டி மற்றும் பானை உள்ளிட்ட பொங்கல் வழிபாட்டுக்குத் தேவையான பொருட்களை சந்தையில் பல இடங்களில் மையம் அமைத்து வியாபாரம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

பொங்கல், மாட்டுப் பொங்கலுக்கு மண் பானையில் பொங்கலிடும் வழக்கமுடையோா் பலா், சிறப்பு சந்தையில் சட்டி, பானையை ஆா்வமாக வாங்கிச் சென்றனா். இதுபோல காரைக்கால் நகரின் பிற இடங்களிலும் மண் சட்டி, பானை வியாபாரம் நடைபெற்றது. சாமந்தி, மல்லி உள்ளிட்ட பல்வேறு மலா்களும் சந்தையில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. மலா்களின் விலை அதிகமாக இருந்ததால், மக்கள் குறைந்த அளவிலேயே வாங்கிச் சென்றனா்.தைக்கு வரவழைக்கப்பட்ட மலா்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT