தற்போதைய செய்திகள்

தெலங்கானாவில் 27 சதவிகித மக்கள் எழுத்தறிவற்றவர்கள்

1st Jan 2020 11:04 PM

ADVERTISEMENT

 

எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை

ஹைதராபாத்: புதிய மாநிலமான தெலங்கானாவில் சுமார் 27 சதவிகித மக்கள் எழுத்தறிவற்றவர்கள்.

இந்த நிலையை மாற்றி நூறு சதவிகிதம் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக்க வேண்டும் என்று முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

நாட்டில் தற்போது அதிகளவில் எழுத்தறிவற்றவர்கள் இருக்கும் மாநிலங்களில் ஆந்திரம், பிகாருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது தெலங்கானா.

அண்மையில் வெளியிடப்பட்ட, 2017-18 ஆம் ஆண்டுக்கான வீட்டுபயோகப் பொருள் பயன்பாட்டு அறிக்கையில் இந்தத் தகவலைப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தெலங்கானா மக்கள்தொகையில் கல்வியறிவு பெற்றவர்கள் 72.8 சதவிகிதத்தினர். மற்றவர்கள், சுமார் 27 சதவிகிதத்தினர் எழுத்தறிவற்றோர். நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் நிலைமை மிகவும் மோசம், எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 23 சதவிகிதம் குறைவாக இருக்கிறது.  ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயும் 20 சதவிகிதம் வித்தியாசம் இருக்கிறது.

எளிதான செய்தியொன்றை ஏதேனுமொரு மொழியில் எழுதவும் படிக்கவும் புரிந்துகொள்ளவும் முடிந்தவர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக அரசின் தேசிய கணக்கெடுப்புத் துறை வரையறுத்துள்ளது. 

நூறு சதவிகித முனைப்பில் ஒருவர், ஒருவருக்குக் கற்றுத் தர வேண்டும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT