தற்போதைய செய்திகள்

தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

25th Feb 2020 01:38 AM

ADVERTISEMENT

திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகன், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அவரை தொடா் மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வயோதிகம் காரணமாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்த அன்பழகனுக்கு திங்கள்கிழமை மாலை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

அவரது உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவா்கள், தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தனா். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT