தற்போதைய செய்திகள்

ஏ.சி. மெக்கானிக் கடத்திக் கொலை:  மேலும் ஒரு இளைஞர் கைது

13th Feb 2020 06:33 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை ஐஸ்ஹவுஸில் ஏ.சி.மெக்கானிக் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திருவல்லிக்கேணி, பி.பி.குளம், 2வது தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார். ஏ.சி மெக்கானிக்காக இவருக்கும், திருவல்லிக்கேணி நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமாருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் ஐஸ்ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் ஒரு டீக்கடையின் அருகே கடந்த 19ஆம் தேதி நின்றுக் கொண்டிருந்த ராம்குமாரை, அங்கு ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்து, கேளம்பாக்கம் கல்லுக்குட்டைப் பகுதியில் சடலத்தை வீசி சென்றது.

ADVERTISEMENT

இது தொடர்பாக ஐஸ்ஹவுஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ராம்குமாரை கொலை செய்ததாக பிரேம்குமார் உள்பட 15 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வந்த திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 8வது தெருவைச் சேர்ந்த கார்த்திக் (26) என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT