தற்போதைய செய்திகள்

ராணுவத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம்

2nd Feb 2020 09:02 PM

ADVERTISEMENT

ராணுவத்தில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் பழமைவாய்ந்த தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள்  பங்கேற்றனர்.

மெட்ராஸ் ராணுவப் பிரிவில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவு தின சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் வெலிங்டனில் உள்ள  புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தியாகிகள் தினமான ஜனவரி 30ஆம் தேதிக்கு  பிறகு வரும் முதல் ஞாயிறன்று  தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம்  ராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்த சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நாட்டிற்காக போரில் வீரமரணமடைந்த  ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடையவும் மேலும் அவர்களின் வீரத்தை நினைவு கூறும் விதமாகவும் அனு சரிக்கப்படுகின்றது. 

இந்த நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரி தேவாலய முறைப்படி தேவாலயத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் கீழ்கண்ட வாசகத்தை வாசித்தார்கள்.

ADVERTISEMENT

நீங்கள் வீட்டிற்கு போகும் போது அவர்களிடம் சொல்லுங்கள் நாங்கள் இருக்கிறோமென்று, அவர்களின் நாளைய தினத்திற்காக நாங்கள் எங்களின் இன்றைய தினத்தை தந்தோமென்று.

ADVERTISEMENT
ADVERTISEMENT