நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித அந்தோணியார் மேல் நிலைப் பள்ளியில் நாய்கள் கண்காட்சி நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மும்பை, தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஜெர்மன் செபர்டு, டாபர் மேன், ராட் வீலர், சைபீரியன் அஸ்கி உட்பட 75 வகையை சேர்ந்த 250 நாய்கள் போட்டியில் பங்கேற்றன.
இந்த கண்காட்சியில் நாய்களின் உடல் வாகு, பற்கள், புத்தி கூர்மை, கீழ் படிதல் போன்றவை சோதனையிடப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. உலகிலேயே சிறந்த குணமும், புத்தி கூர்மையும் கொண்ட நாய்களில் ஜெர்மன் செப்பர்ட் 2-ஆம் இடம் வகிக்கின்றது, அதனால் தான் காவல் துறை மற்றும் ராணுவத்தில் இவ்வகை நாய்கள் பயன்படுத்தப்படுகின்றது.
ஜெர்மெனிக்கு அடுத்து ஊட்டியில் தான் ஜெர்மன் செப்பர்ட் நாய்க்கு ஏற்ற காலநிலை என்பதால் இதன் வளர்ப்பு தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். நாய்களை பாதுகாப்பிற்காக வளர்ப்பதோடு அவற்றை முறையாக பயிற்றுவிக்க வேண்டும் என்று நாய்கள் கண்காட்சியன் நீலகிரி ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி தெரிவித்தார்.
இதில் நாய்களின் உடல் வாகு, பற்கள், புத்தி கூர்மை, கீழ் படிதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டன.