தற்போதைய செய்திகள்

உடும்பைப் பிடித்து டிக்டாக் வெளியிட்டு, சமைத்துத் தின்ற 6 பேர் கைது

23rd Apr 2020 01:19 PM

ADVERTISEMENT

 

மணப்பாறை அருகே உடும்பைத் பிடித்துத் துன்புறுத்தி டிக்டாக் செயலியில் விடியோ எடுத்து வெளியிட்டதுடன், சமைத்தும் தின்றதாக 6 இளைஞர்களை  வனத் துறையினர் கைது செய்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை வனச் சரகப் பகுதியில் இளைஞர்கள் சிலர் உடும்பைப் பிடித்து துன்புறுத்தி டிக்டாக் செயலியில் விடியோ வெளியிட்டுள்ளனர்.

இதுபற்றி மணப்பாறை வனச் சரகர் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சோலையம்மப்பட்டியை சேர்ந்த இளைஞர்கள் சரவணன், செல்வக்குமார், பொன்னர், ரஞ்சித்குமார், லோகநாதன், சூர்யா ஆகியோர் உடும்பை வேட்டையாடியதும் துன்புறுத்தி டிக்டாக் செயலியில் வெளியிட்டதும், பின்னர் சமைத்துத் தின்றதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து அவர்கள் ஆறு பேரையும் கைது செய்த வனத்துறையினர், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT