தற்போதைய செய்திகள்

தொழிற்சாலைப் பணிகள் தேர்வுகள் ஒத்திவைப்பு : டிஎன்பிஎஸ்சி

7th Apr 2020 01:10 PM

ADVERTISEMENT

தொழிற்சாலைப் பணிகள் உதவி இயக்குநர், உதவி கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஏப். 25, 26 தேதிகளில்  நடைபெறுவதாக அறிவித்திருந்த, தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில், உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் (Assistant Director of Industries and Commerce (Technical) & 
Assistant Superintendent (Chemical Wing) in the Department of
Micro, Small and Medium Enterprises [EI(1)] Department included in
Tamil Nadu Industries Service) ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகத்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குறிப்பிட்டுள்ளது. 

இந்தத் தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT