கரோனா கால ஊரடங்கு வரும் 15 ஆம் தேதி முடிவுக்கு வரும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், கூட்டம் கூடாதவாறு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ADVERTISEMENT
ஊரடங்கு முடிவுக்கு வரும் என்று ஆதித்யநாத் தெரிவித்திருப்பதை சுட்டுரையில் செய்தியாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என்பது பற்றி எதுவும் தெரியாத நிலையில், கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், யோகி ஆதித்யநாத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.