சிறப்புச் செய்திகள்

வரி செலுத்துவோரே எச்சரிக்கை.. மார்ச் 31ஆம் தேதி நெருங்குகிறது

ENS

மார்ச் 31ஆம் தேதியுடன் நடப்பு நிதியாண்டு 2022-23 முடிவடைவதால், நிதித் திட்டமிடல், வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான அவகாசம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

நிரந்தரக் கணக்கு எண்ணை (பான்) ஆதார் எண்ணுடன் இணைப்பது, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்தல், முன்பண வரி செலுத்துதல், வரிச் சேமிப்புக்காக முதலீடு செய்தல் மற்றும் இதுபோன்ற பிற பணிகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் செய்ய வேண்டியது அவசியம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த காலக்கெடுக்குள் அனைத்தையும் செய்து முடிக்க வேண்டியது வரி செலுத்துவோர் அபராதம் மற்றும் பல்வேறு சிக்கல்களிலிருந்து தப்பிக்க உதவும்.

பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவும்
மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டு எண்ணை ஆதாருடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை வரி செலுத்துவோர் பான் எண்ணை ஆதாருடன் நிச்சயம் இணைத்திருப்பார்கள். ஏதேனும் காரணத்தால் இணைக்க முடியாதவர்களுக்கு மார்ச் 31தான் காலக்கெடு.

இந்த காலக்கெடுவிற்கு முன் இணைக்கப்படாவிட்டால், அடுத்த மாதம் முதல் ஆதார் எண்களுடன் இணைக்கப்படாத பான் எண்கள் செயலிழந்துவிடும். செயல்படாத பான் எண், அதிக சிக்கல்களை ஏற்படுத்தும், ஏனெனில் பான் எண் இல்லாமல் எந்த நிதி பரிவர்த்தனையும் செய்ய முடியாமல் போகலாம்.

"பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது மிகவும் முக்கியமானது, அவ்வாறு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். இல்லையெனில் உங்கள் பான் ரத்துசெய்யப்படலாம், மேலும் இது பரஸ்பர நிதிகள் போன்ற உங்கள் முதலீடுகளையும் பாதிக்கலாம்" என்று பதிவுசெய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள் சங்கத்தின் (ஏஆர்ஐஏ) துணைத் தலைவர் விஷால் தவான்  தெரிவித்துள்ளார்.

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது, ஆனால் அது மீண்டும் நடக்க வாய்ப்பில்லை என்றுதான் நிபுணர்கள் கருதுகின்றனர்.

முன்கூட்டியே வரி செலுத்துதல்
2022-2023 நிதியாண்டிற்கான முன்கூட்டியே வரி செலுத்துவதற்கான முறையில், இறுதித் தவணையைச் செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆகும். 

“முன்கூட்டியே வரி செலுத்துவதற்கான கடைசித் தவணை மார்ச் 15, எனவே ஒருவர் செலுத்த வேண்டிய வருமான வரியை நாளைக்குள் செலுத்த வேண்டும். வருமான வரித்துறையின் கூற்றுப்படி, டிடிஎஸ் விலக்குக்குப் பிறகு ஒருவரின் திட்டமிடப்பட்ட வரி ரூ.10,000 அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் முன்கூட்டிய வரி செலுத்த வேண்டும்.

வரி சேமிப்பு முதலீடுகள்
2022-23 ஆம் ஆண்டிற்கான வரிச் சேமிப்புக்கான முதலீடுகளை செய்யாதவர்களுக்கு மார்ச் 31 வரை தான் அவகாசம் உள்ளது. வரித் திட்டமிடல் என்பது, வரிச் சுமையைக் குறைக்கவும் மற்றொரு வகையில் சேமிக்கவும் உதவுகிறது. 

பழைய வரி செலுத்தும் முறையின் கீழ், ஒரு வரி செலுத்துவோர், மார்ச் 31ஆம் தேதிக்குள் வரி சேமிப்புக்கான முதலீடு திட்டங்களில் சேர்ந்து, பிரிவு 80C இன் கீழ் ரூபாய் 1.5 லட்சம் வரையிலான வரி விலக்குகளைப் பெறலாம்.

புதுப்பிக்கப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல்
2019-20-ஆம் நிதியாண்டு அல்லது மதிப்பீட்டு ஆண்டு 2020-21க்கான புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும். 

புதுப்பிக்கப்பட்ட வருமான வரி முறையில், பிழைகள் அல்லது குறிப்பிட்ட வருமானத்தில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி அறிக்கையை தொடர்புடைய நிதி மதிப்பீட்டு ஆண்டு முடிவில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

எனவே.. மார்ச் இறுதிக்குள் செய்ய வேண்டியவை
பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்
வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
2019-20 நிதியாண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
முன்கூட்டிய வரி செலுத்துதலின் இறுதி தவணை செலுத்தப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்க.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

SCROLL FOR NEXT