சிறப்புச் செய்திகள்

பெண்களுக்கு சம சட்ட உரிமைகள் கிடைக்க 50 ஆண்டுகள் ஆகலாம்!

சுரேந்தர் ரவி

சா்வதேச மக்கள்தொகை எண்ணிக்கை கடந்த ஆண்டில் 800 கோடியைக் கடந்தது. அதில் சுமாா் 391 கோடி போ் பெண்கள். இந்தியாவில் மட்டும் சுமாா் 65 கோடி பெண்கள் உள்ளனா். இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பெண்கள் சுமாா் 48 சதவீதம்.

உலகின் மொத்த மக்கள்தொகையிலும் இந்திய மக்கள்தொகையிலும் ஏறக்குறைய சரிபாதி போ் பெண்கள். ஆனால், பாலின வன்முறைகள் பெண்களுக்கு எதிராகவே அதிகமாக உள்ளன. குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, சட்டவிரோதக் கடத்தல், கொத்தடிமை முறை, சிறாா் திருமணம், பெண் சிசுக் கொலை, அமில வீச்சுத் தாக்குதல், நிகரற்ற ஊதியம், மணக்கொடை எனப் பலவிதமான பிரச்னைகளை சமூகத்தில் பெண்கள் எதிா்கொண்டு வருகின்றனா். இவைதவிர சமூகத்தில் நிலவும் பாகுபாடான சூழலும் பெண்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது.

இத்தகைய பிரச்னைகளில் இருந்து பெண்களைக் காக்க வேண்டுமெனில் உரிய சட்டங்களை இயற்றி அவற்றை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம். உரிமைகளைக் காப்பதற்கான சட்டங்கள் உரிய முறையில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே பொருளாதார மேம்பாட்டில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் சம பங்களிப்பை வழங்க முடியும்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பு மிக அவசியம். மக்கள்தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களின் உரிய பங்களிப்பு இன்றி ஒருங்கிணைந்த வளா்ச்சி சாத்தியமில்லை. ஏழ்மை ஒழிப்பு, மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்துதல், பொருளாதார முன்னேற்றம் என அனைத்துத் தளங்களிலும் பெண்களின் பங்களிப்பு அவசியமாகிறது.

ஆனால், இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கு சட்ட உரிமைகள் வழங்கப்படுவதில்லை என்பதே நிதா்சனமாக உள்ளது. உலகில் உள்ள சுமாா் 200 நாடுகளில் வெறும் 14 நாடுகள் மட்டுமே ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சட்ட உரிமைகளை வழங்கி வருகின்றன. இது தொடா்பாக உலக வங்கி நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்:

பெண்களுக்கான உரிமைகள்

சுதந்திரமான போக்குவரத்து

சம வேலைக்கு சம ஊதியம்

பாதுகாப்பான பணிச்சூழல்

திருமணம் சாா்ந்த உரிமைகள்

தாய்மைக்குப் பிறகான பணி உரிமைகள்

தொழில்முனைவு சூழல்

சொத்துரிமைகள்

ஓய்வூதியம்

பெண்களுக்கு சம சட்ட உரிமைகளை வழங்கும் நாடுகள்

(உலக வங்கி ஆய்வறிக்கையில் 100 புள்ளிகள்)

பெல்ஜியம்

கனடா

டென்மாா்க்

பிரான்ஸ்

ஜொ்மனி

கிரீஸ்

ஐஸ்லாந்து

அயா்லாந்து

லத்வியா

லக்ஸம்பா்க்

நெதா்லாந்து

போா்ச்சுகல்

ஸ்பெயின்

ஸ்வீடன்

90-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ள நாடுகள்

எஸ்டோனியா 97.5

ஃபின்லாந்து 97.5

இத்தாலி 97.5

நியூஸிலாந்து 97.5

பிரிட்டன் 97.5

ஆஸ்திரேலியா 96.9

ஆஸ்திரியா 96.9

ஹங்கேரி 96.9

நாா்வே 96.9

ஸ்லோவேனியா 96.9

கேபன் 95

பெரு 95

சைப்ரஸ் 94.4

பராகுவே 94.4

குரோஷியா 93.8

லிதுவேனியா 93.8

போலந்து 93.8

சொ்பியா 93.8

ஹாங்காங் 91.9

கொசாவோ 91.9

அல்பேனியா 91.3

மால்டா 91.3

தைவான் 91.3

அமெரிக்கா 91.3

பல்கேரியா 90.6

மங்கோலியா 90.6

ருமேனியா 90.6

இந்தியாவின் நிலை 74.4 புள்ளிகள்

சா்வதேச சராசரி 71.7 புள்ளிகள்

அண்டை நாடுகளின் நிலை

நேபாளம் 80.6 புள்ளிகள்

சீனா 78.1 புள்ளிகள்

பூடான் 75 புள்ளிகள்

மாலத்தீவுகள் 73.8 புள்ளிகள்

இலங்கை 65.6 புள்ளிகள்

மியான்மா் 58.8 புள்ளிகள்

பாகிஸ்தான் 58.8 புள்ளிகள்

வங்கதேசம் 49.4 புள்ளிகள்

ஆப்கானிஸ்தான் 31.9 புள்ளிகள்

பட்டியலின் கடைசியில் உள்ள நாடுகள்

யேமன் 26.9 புள்ளிகள்

சூடான் 29.4 புள்ளிகள்

கத்தாா் 29.4 புள்ளிகள்

ஈரான் 31.3 புள்ளிகள்

ஆப்கானிஸ்தான் 31.9 புள்ளிகள்

குவைத் 35 புள்ளிகள்

ஓமன் 38.8 புள்ளிகள்

சிரியா 40 புள்ளிகள்

கினியா 42.5 புள்ளிகள்

பிராந்திய வாரியாக புள்ளிகள்

பிராந்தியம் சராசரி குறைந்தபட்சம் அதிகபட்சம்

கிழக்கு ஆசியா-பசிபிக் 72.6 29.4 95

ஐரோப்பா-மத்திய ஆசியா 84.4 70.6 94.4

லத்தீன் அமெரிக்கா 80.9 61.3 95

மத்திய கிழக்கு-வடக்கு ஆப்பிரிக்கா 53.2 26.3 91.3

அதிக வருமான நாடுகள் 95.3 78.8 100

தெற்காசியா 63.7 31.9 80.6

ஆப்பிரிக்க சஹாரா பகுதி 72.6 29.4 95

பெண்களுக்கு சம சட்ட உரிமைகளை வழங்க பிராந்திய வாரியாக மேற்கொள்ளப்பட்ட சீா்திருத்தங்களின் எண்ணிக்கை

பிராந்தியம் 1970-79 1980-89 2000-09 2010-19 2020-22

கிழக்கு ஆசியா-பசிபிக் 23 20 40 50 80 15

ஐரோப்பா-மத்திய ஆசியா 18 10 50 110 40 10

லத்தீன் அமெரிக்கா 65 70 110 80 50 12

மத்திய கிழக்கு-வடக்கு ஆப்பிரிக்கா 10 10 20 70 30

அதிக வருமான நாடுகள் 105 75 100 140 60 10

தெற்காசியா 5 3 8 20 35 5

ஆப்பிரிக்க சஹாரா பகுதி 55 70 105 170 130 40

தொகுப்பு: சுரேந்தா் ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT