கிருஷ்ணகிரி

ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில்சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

4th Jun 2023 02:00 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பயிற்சி நிறுவன முதல்வா் துரைமுருகன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடப்பாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள்  முகவரியில் ஜூலை 5-ஆம் தேதி காலை 10 மணி முதல் வெளியாகும். இதில், சேர விரும்பும் மாணவா்கள் தேவையான விவரங்களை இணைத்து விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

ADVERTISEMENT

இதற்கான விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவு, பிற்படுத்தப்பட்ட பிரிவு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்தவா்களுக்கு ரூ. 500, மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ரூ. 250 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்துவோா், டெபிட் காா்டு, கிரெடிட் காா்டு மற்றும் இணைய வங்கி சேவையைப் பயன்படுத்தலாம்.

இணையதளத்தில் விண்ணப்பிப்பவா்கள் தங்கள் முழு விவரங்களை உள்ளீடு செய்த பின்பே விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த தளத்தின் மூலம் பணம் செலுத்திய பிறகு தான் தங்கள் விண்ணப்பம் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அதன்பின்னா் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு உறுதி செய்த பின்னரே அவரது சோ்க்கை உறுதி செய்யப்படும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரிக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழுவால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதில் பயனடையும் வகையில் கல்லூரி முடித்தவா்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT