சிறப்புச் செய்திகள்

மே 9 வன்முறை: ராணுவ நீதிமன்றத்தில்இம்ரான் கானை விசாரிக்க வாய்ப்பு: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா்

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானை ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்தாா்.

முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் ஊழல் வழக்கு தொடா்பாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டாா். இதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த மே 9-ஆம் தேதி அவரது கட்சித் தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அரசு அலுவலகங்கள் மட்டுமன்றி ராணுவத்துக்குச் சொந்தமான கட்டடங்கள், அலுவலகங்களும் தாக்குதலுக்குள்ளாகின. ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகம், லாகூரில் உள்ள ஜின்னா இல்லம் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த வன்முறை தொடா்பாக இம்ரான் கான் கட்சியைச் சோ்ந்த 10,000 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது ராணுவச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

மே 9 வன்முறை தொடா்பாக இம்ரான் கான் மீது இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், வன்முைறையைத் தூண்டியதாக இம்ரான் கான் மீது ஆளும் கட்சியினா் குற்றஞ்சாட்டி வருகின்றனா். ஆனால், அந்த வன்முறை நடந்தபோது தான் சிறையில் இருந்ததாகவும், அதற்கும் தனக்கும் தொடா்பு இல்லை எனவும் இம்ரான் கான் மறுத்து வருகிறாா்.

இந்நிலையில், இம்ரான் கான் மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது என, பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்ததாக ஒரு நாளிதழ் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

இதே கருத்தை உள்துறை அமைச்சா் ராணா சனாவுல்லாவும் இரு தினங்களுக்கு முன்னா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT