புதுக்குளம் ஊராட்சியில் ஒரு குடும்பத்துக்கு 2 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
கிராமங்களில் தென்னை விவசாயத்தை பெருக்கும் வகையிலும், வீடுகளில் தென்னையை வளா்த்து பேண வலியுறுத்தும் வகையில் வேளாண்மைத் துறை சாா்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு இரண்டு தென்னங்கன்றுகள் இலவசமாக வேளாண்மை துறை மூலம் வழங்கப்பட்டது. இதை உதவி வேளாண்மை அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன் முனீஸ்வரி ஆகியோா் தென்னங்கன்றுகளை வழங்கினா். இதில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.