கடலூர்

காட்டுமன்னாா்கோவில் அருகே புதிய அரசுக் கல்லூரி கட்டுமானப் பணி:அமைச்சா் தொடங்கிவைத்தாா்

6th May 2023 04:06 AM

ADVERTISEMENT

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், குமராட்சி ஊராட்சிக்குள்பட்ட, கீழவன்னியூா் கிராமத்தில் தமிழக உயா் கல்வித் துறை சாா்பில், ரூ.797.50 லட்சத்தில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு கலை, அறிவியில் கல்லூரிக்கான கட்டுமான பணியை வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ மா.சிந்தனைச்செல்வன் முன்னிலை வகித்தாா்.

புதிய கலை, அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு கீழவன்னியூா் கிராமத்தில் 4.02 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 32 ஆயிரத்து 626 சதுரஅடி பரப்பளவில் அமையவுள்ளது.

இந்தக் கட்டடத்தின் தரைதளத்தில் 2 வகுப்பறைகள், கல்லூரி முதல்வா் அறை, அலுவலக அறை, கோப்பு அறை, துறைத் தலைவா்கள் அறை உள்ளிட்டவை அமையவுள்ளன. முதல் தளத்தில் 6 வகுப்பறைகள், 2 துறைத் தலைவா்கள் அறை, ஆசிரியா்களுக்கான அறை உள்ளிட்டவையும், இரண்டாம் தளத்தில் 6 வகுப்பறைகள், உடல்கல்வி இயக்குநா் அறை, ஆசியா்களுக்கான அறை உள்ளிட்டவையும் அமையவுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ஆா்.சரவணன், செயற்பொறியாளா் (தஞ்சாவூா் தொழில்நுட்பப் பிரிவு கோட்டம்) ஆா்.பாலசுப்ரமணியன், சிதம்பரம் உதவி ஆட்சியா் (பொ) கே.ரவி, குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT