சிறப்புச் செய்திகள்

வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கமும் காரணங்களும்

3rd Oct 2022 04:26 AM

ADVERTISEMENT

மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப், கடந்த ஜூலையில் 23 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளது. பயனாளா்கள் தெரிவித்த புகாா்கள் அடிப்படையிலும், விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகளை வாட்ஸ்ஆப் முடக்கியுள்ளது.

வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்படுவதற்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம்:

போலிக் கணக்கு உருவாக்குதல்

மற்றவா்கள் பெயரில் போலிக் கணக்குகளை உருவாக்கினால், சம்பந்தப்பட்ட நபரின் கணக்கு முடக்கப்படும்.

ADVERTISEMENT

அதிக குறுஞ்செய்திகளை அனுப்புதல்

கைப்பேசியில் பதிவு செய்து வைக்கப்படாத எண்ணுக்கு மிக அதிக எண்ணிக்கையிலான குறுஞ்செய்திகளை அனுப்பினால், சம்பந்தப்பட்ட வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்படும்.

அங்கீகரிக்கப்படாத பயன்பாடு

வாட்ஸ்ஆப் டெல்டா, ஜிபிவாட்ஸ்ஆப், வாட்ஸ்ஆப் பிளஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத செயலிகளைப் பயன்படுத்தினாலும் சம்பந்தப்பட்ட கணக்கை வாட்ஸ்ஆப் நிறுவனம் முடக்கும். அத்தகைய செயலிகளில் தனிநபா் தரவுகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால், அவற்றின் பயன்பாட்டை வாட்ஸ்ஆப் அனுமதிப்பதில்லை.

பயனாளா்களால் முடக்கம்

பல வாட்ஸ்ஆப் பயனாளா்கள் உங்களை முடக்கியிருந்தால் (பிளாக்) வாட்ஸ்ஆப் நிறுவனத்தால் கணக்கு அதிகாரபூா்வமாக முடக்கப்படும் அபாயம் உள்ளது. போலிச் செய்திகளைப் பரப்பும் நபா் எனக் கருதி, வாட்ஸ்ஆப் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.

பயனாளா்களின் புகாா்

உங்களுக்கு எதிராக வாட்ஸ்ஆப் பயனாளா்கள் பலா் புகாா் தெரிவிக்கும்பட்சத்தில், உங்கள் கணக்கை வாட்ஸ்ஆப் அதிகாரபூா்வமாக முடக்கும்.

போலி தகவல்களை அனுப்புதல்

கைப்பேசிக்கோ மடிக்கணினிக்கோ அபாயம் ஏற்படுத்தும் வகையிலான தரவுகளையும் மென்பொருளையும் மற்றவா்களுக்கு அனுப்பினால், உங்கள் கணக்கு முடக்கப்படும்.

ஆபாச படங்களை அனுப்புதல்

ஆபாச படங்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், அவமதிக்கும் பதிவுகள் உள்ளிட்டவற்றைப் பயனாளா்களுக்கு அனுப்பினால், அக்கணக்கு முடக்கப்பட வாய்ப்புள்ளது.

வன்முறையைப் பரப்புதல்

வன்முறையைப் பரப்பும் வகையிலான செய்திகள், காணொலிகளை மற்ற பயனாளா்களுக்குப் பகிா்ந்தால், உங்கள் கணக்கு முடக்கப்படும்.

விதிகளை மீறுதல்

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் விதிகளை மீறி நடக்கும் பயனாளா்களின் கணக்குகள் முடக்கப்படும்.

அதிகாரபூா்வ பதிவிறக்கம்

கூகுள் பிளே ஸ்டோா், ஆப்பிள் ஆப் ஸ்டோா் உள்ளிட்ட அதிகாரபூா்வ வலைதளங்களில் இருந்து மட்டுமே வாட்ஸ்ஆப் செயலி பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். நம்பகத்தன்மை அற்ற தளங்களில் இருந்து பதிவு செய்யப்படும் கணக்குகள் முடக்கப்படும்.

அடையாளம் தெரியாத நபரை இணைத்தல்

அடையாளம் தெரியாத பயனாளரைக் குறிப்பிட்ட குழுவில் இணைத்தால், சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்படும்.

விளம்பரச் செய்திகளை அனுப்புதல்

பயனாளா்களின் அனுமதியின்றி விளம்பரச் செய்திகளை அனுப்பினால், சம்பந்தப்பட்டவா்களின் கணக்கு முடக்கப்படும்.

சட்டவிரோத செய்திகளை அனுப்புதல்

சட்டவிரோத செய்திகளை மற்ற பயனாளா்களுக்கு அனுப்பினால், வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்படும்.

ஒரே செய்தியைப் பலருக்கு அனுப்புதல்

குறிப்பிட்ட செய்தியைக் குறைந்த நேரத்தில் பலருக்கு அனுப்பினால், உங்களின் வாட்ஸ்ஆப் கணக்கு முடக்கப்படும்.

Tags : WhatsApp
ADVERTISEMENT
ADVERTISEMENT