சிறப்புச் செய்திகள்

குறைவான ஊதியத்தில் 8 வருடங்களாக பணியாற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்!

11th Jun 2021 03:14 PM | தே.சாலமன்

ADVERTISEMENT


செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கடந்த 8 வருடங்களாக குறைவான ஊதியம் பெற்று வருகின்றனர்.  
 
தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பொது சுகாதாரத்துறையினர் தமிழக அரசு அரசாணை ஆணை எண்.325 - 2012 -ன் படி, நேரடி பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் தான் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்.

இவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களின் பணியாக புறநோயாளிகள் சீட்டுப்பதிவு, மருந்து கட்டும் பணி, துப்புரவுப்பணி, உள்நோயாளி வார்டு பணி, இரவுக் காவலர், ஆம்புலன்ஸ் உதவியாளர், அமரர் ஊர்தி உதவியாளர் என 14 வகையான பணிகளை அந்தந்தப் பகுதிகளி்ல் உள்ள மருத்துவமனைகளுக்கு ஏற்ப பல்வேறு பணிகளில் இவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  தமிழகம் முழுவதும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் என திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றும் சுமார் 200 பணியாளர்கள் உள்பட இது வரையில் சுமார் 4150 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.  

இவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு தினக்கூலியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள மாவட்ட ஆட்சியர்களால் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலியாக இன்று வரையில் வழங்கப்பட்டு வருகிறது. 

கரோனா போரிடர் காலங்களில் தன்னலம் பாராமல் பல்வேறு பணிகளை செய்து வருகின்ற பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு கடலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் நாளொன்றுக்கு ரூ.650 வீதம் தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

கரோனா நோயாளிகளை கவனிக்கும் போது பல பணியாளர்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாக சில பணியாளர்கள் இறந்தும் உள்ளனர். கடலூர், நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களில் பேரிடர் புயல் காலங்களில்  பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் முன் களப்பணியாளர்களாக பணியாற்றியுள்ளனர். 

2013 -இல் நியமிக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களில் பெரும்பாலோனார் 45 வயதைக் கடந்தவர்களாக இருப்பதாலும், வேலைவாய்ப்பகத்திலும் பதிவு எண் நீக்கப்பட்டதாலும் வேறு விதமான அரசு வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.  

மேலும், பணி நியமனம் செய்யப்பட்டவர்களில் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அ.ஆ.எண் 151 அடிப்படையில் 2 ஆண்டு முடித்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் எனவும்,  இதரப் பணியாளர்கள் 5 ஆண்டு பணி நிறைவு செய்தவர்கள் கண்டிப்பாக பணி நிரந்தரம் செய்யப்படும் என சுகாதாரத்துறை சார்பில் 2019 -இல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்ட தொடக்கத்தில் ரூ.175 வழங்கப்பட்ட நிலையில் தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு ரூ 487 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

அரசு தரப்பில்..
பணி நியமனம் செய்யப்பட்டவர்களில் மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அ.ஆ.எண் 151 அடிப்படையில் 2 ஆண்டு முடித்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் எனவும்,  இதரப் பணியாளர்கள் 5 ஆண்டு பணி நிறைவு செய்தவர்கள் கண்டிப்பாக பணி நிரந்தரம் செய்யப்படும் என சுகாதாரத்துறை சார்பில் 2019 -இல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பணி நிரந்தரம்... 
கரோனா தொற்று காலத்தில் அறையை சுத்தம் செய்தல், கரோனா நோயாளிகளுக்கு சாப்பாடு முதல் தேநீர், கபசுரகுடிநீர் வழங்குதல் உள்பட பல்வேறு பணிகளை தன்னாலம் கருதாமல் பணி செய்து வரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் தமிழகம் முழுவதும் 8 வருடங்களாக குறைவான ஊதியம் பெற்று வரும் பணியாற்றி வருவதால் இந்த  பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்.

கடலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டு வரும் தினக்கூலி ரூ.650 போல், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு வழங்கி உதவிட வேண்டும் என பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : Multipurpose hospital low pay
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT