சிறப்புச் செய்திகள்

அழுகிய சம்பா பயிர்களைக் குடும்பத்தினருடன் அகற்றும் விவசாயிகள்

ஞானவேல்

சீர்காழி அருகே பாடுபட்டு வளர்த்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகியும் முளைத்தும் பயனற்று கிடப்பதை கண்டு மனம் கலங்கிய விவசாயிகள் அந்த பயிர்களை குடும்பத்தினருடன் சேர்ந்து அகற்றும் பணியை துவங்கியுள்ளனர்.   உழவு பணிகளுக்கே பணம் வழங்க முடியாத நிலையில் அகற்றும் பணிக்கு கூலி கொடுக்க முடியாததால் குடும்த்தினரே அகற்றும் அவலத்தில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 

சீர்காழி தாலுக்காவில் பாடுபட்டு வளர்த்த பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகியும் முளைத்தும் பயனற்று கிடப்பதை கண்டு மனம் கலங்கிய விவசாயிகள் அந்த பயிர்களை அகற்றும் பணியை துவங்கியுள்ளனர்.  

மயிலாடுதுறை மாவட்டம்,  சீர்காழி தாலுக்காவில் சீர்காழி,கொள்ளிடம், நல்லூர்,குன்னம், கொண்டத்தூர், ஆச்சாள்புரம், கொண்டல், அத்தியூர், திட்டை, பெரம்பூர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி மழைநீரில் மூழ்கி அழுகியும் முற்றிய கதிர்கள் முளைத்தும் பாதிக்கபட்டுள்ளது. 

நிவா், புரெவி புயல் என அடுத்தடுத்த பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் இடுபொருள் இழப்பீடாக வழங்கபடும் என அறிவித்தார். ஆனால் அந்த தொகையும் பாதிப்புக்கு தக்கவாறு ரூ.2,000 முதல் ரூ.6,400 வரை மட்டுமே வழங்கபட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், இந்த மாதம் பெய்த பருவம் தவறிய கனமழையால் அனைத்து பயிர்களும் தண்ணீரில் மூழ்கி அழுகியது. கடைமடை என்பதால் மழை விட்டும் இந்த தண்ணீர் இதுவரை வடியாத நிலையில் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

புளிச்சக்காடு கிராமத்தில் பாடுபட்டு வளர்த்த பயிர்கள் நிலத்தில் அழுகியும் முளைத்தும் பயனற்று கிடப்பதை கண்டு மனம் கலங்கிய விவசாயிகள் அந்த பயிர்களை அகற்றும் பணியை துவங்கியுள்ளனர். 

மழை நீரில் மூழ்கி முளைத்து கருத்து போன நெல் கதிர்கள். 

அரசு வழங்கிய இழப்பீடு அழுகிய பயிர்களை அகற்றுவதற்கு கூட போதாது என கூறிய விவசாயிகள், தங்கள் குடும்பத்தினருடன் அழுகிய  பயிர்களை அகற்றி வருவதாக கண்ணீரோடு தெரிவித்தனர்.

இதில் உள்ள கதிர்கள் கருத்து போயும் முளைத்தும் துர்நாற்றம் வீசுவதால் கால்நடைகளுக்கு தீவனங்களுக்குக் கூட ஆகாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அரசு முழு ஆய்வு செய்து கூடுதல் இழப்பீடும் 100% காப்பீடும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT