சிறப்புச் செய்திகள்

நம்பிக்கையூட்டும் கரோனா தடுப்பூசிகள்!

12th Jan 2021 04:55 AM

ADVERTISEMENT


உலகில் கரோனா நோய்த்தொற்று பரவிய ஓராண்டுக்குப் பிறகு அதற்கான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. உலகம் முழுவதும் 200-க்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றுக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியாவில் வரும் 16-ஆம் தேதி முதல் கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படவுள்ளன. இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள முக்கிய கரோனா தடுப்பூசிகளின் ஒப்பீடு:

கோவேக்ஸின்
தயாரித்த நிறுவனங்கள்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய தீநுண்மியியல் மையம் ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிப்பு

தற்போதைய நிலை
இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி

தடுப்பூசியின் அளவு
4 வார இடைவெளியில் இரு முறை

ADVERTISEMENT

சேமிப்பு வெப்பநிலை
அறை வெப்பநிலை (7 நாள்கள்)

விலை
ரூ.100-க்கும் குறைவு

கோவிஷீல்ட்
தயாரித்த நிறுவனங்கள்
பிரிட்டனின் அஸ்ட்ரா ஸெனகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரிப்பு

தற்போதைய நிலை
இந்தியா, பிரிட்டன், ஆா்ஜென்டீனா, மெக்ஸிகோவில் பயன்பாட்டுக்கு ஒப்புதல்

தடுப்பூசியின் அளவு
4 வார இடைவெளியில் இரு முறை

சேமிப்பு வெப்பநிலை
2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் (6 மாதங்கள்)

விலை
ரூ.200 (இந்தியாவில்), ரூ.1,000 (மற்ற நாடுகளில்)

ஃபைஸா்
தயாரித்த நிறுவனங்கள்
அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனமும் ஜொ்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரிப்பு

தற்போதைய நிலை
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், சவூதி அரேபியா, சிங்கப்பூா், ஆா்ஜென்டீனா, மெக்ஸிகோவில் ஒப்புதல்

தடுப்பூசியின் அளவு
3 வார இடைவெளியில் இரு முறை

சேமிப்பு வெப்பநிலை
மைனஸ் 70 டிகிரி செல்ஷியஸ்

விலை
ரூ.5,500

மாடா்னா
தயாரித்த நிறுவனம்
அமெரிக்காவின் மாடா்னா நிறுவனம்

தற்போதைய நிலை
அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், ஐரோப்பிய யூனியனில் பயன்பாட்டுக்கு ஒப்புதல்.

தடுப்பூசியின் அளவு
4 வார இடைவெளியில் இரு முறை 

சேமிப்பு வெப்பநிலை
2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் (30 நாள்கள்) மைனஸ் 20 டிகிரி செல்ஷியஸ் (6 மாதங்கள்) 

விலை
ரூ.7,200

ஸ்புட்னிக்-வி
தயாரித்த நிறுவனம்

ரஷியாவின் கமலீயா ஆராய்ச்சி மையம்
தற்போதைய நிலை
ரஷியா உள்ளிட்ட நாடுகளில் பயன்பாட்டுக்கு ஒப்புதல்

தடுப்பூசியின் அளவு
3 வார இடைவெளியில் இரு முறை

சேமிப்பு வெப்பநிலை
2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ்

ஜான்சன்&ஜான்சன்
தயாரித்த நிறுவனம்
ஜான்சன்&ஜான்சன் நிறுவனம் 

தற்போதைய நிலை
மூன்றாம் கட்ட பரிசோதனை

தடுப்பூசியின் அளவு
ஒரு முறை (இரு முறை செலுத்துவது தொடா்பாக ஆய்வு)

சேமிப்பு வெப்பநிலை
2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் (3 மாதங்கள்), மைனஸ் 20 டிகிரி செல்ஷியஸ் (2 ஆண்டுகள்)


கரோனாவேக்
தயாரித்த நிறுவனம்
சீனாவின் சைனோஃபாா்ம் நிறுவனம்

தற்போதைய நிலை
சீனாவில் பயன்பாட்டுக்கு ஒப்புதல்

தடுப்பூசியின் அளவு
2 வார இடைவெளியில் இரு முறை

வெக்டாா் இன்ஸ்டிடியூட்
தயாரித்த நிறுவனம்
ரஷியாவின் வெக்டாா் இன்ஸ்டிடியூட்

தற்போதைய நிலை
மூன்றாம் கட்ட பரிசோதனை

தடுப்பூசியின் அளவு
2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ்

நோவாவேக்ஸ்
தயாரித்த நிறுவனம்
அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம்

தற்போதைய நிலை
மூன்றாம் கட்ட பரிசோதனை

தடுப்பூசியின் அளவு
2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ்

கோன்விடெசியா
சீனாவின் கேன்சைனோ பயலாஜிக்ஸ் நிறுவனம்

தற்போதைய நிலை
சீன ராணுவத்தில் மட்டும் பயன்பாட்டில் உள்ளது

தொகுப்பு: சுரேந்தா் ரவி

Tags : Corona Vaccines
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT