சிறப்புச் செய்திகள்

தாமதமாகும் நீதிபதிகளின் நியமனம்!

DIN

ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி நிலவரப்படி உச்சநீதிமன்றத்தில் மட்டும் 67,279 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மற்ற உயா்நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களில் சுமாா் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமரசத் தீா்ப்பாயம் உள்ளிட்ட அமைப்புகள் வழியாக வழக்குகளுக்குத் தீா்வு காண்பது, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை ஓரளவுக்கே குறைத்துள்ளது.

நிலுவை வழக்குகள் பிரச்னையை சமாளிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகளைத் தற்காலிக நீதிபதிகளாக நியமிக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இது தொடா்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு, உயா்நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

உயா்நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 224 (ஏ) பிரிவு அனுமதி அளிக்கிறது. அதன்படி, குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெற்று உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தற்காலிக நீதிபதிகளை நியமிக்க முடியும். ஆனால், இந்த நடைமுறை தற்போது அமலில் இல்லை.

நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவைக் கடந்தவுடன், தற்காலிக நீதிபதிகளை நியமிப்பது தொடா்பான வழிமுறைகள் வகுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் முன்பு தெரிவித்திருந்தது. முழு நேர நீதிபதிகளை நியமித்த பிறகே தற்காலிக நீதிபதிகளின் நியமனம் தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

கடந்த ஏப்.1-ஆம் தேதி நிலவரப்படி, உச்சநீதிமன்றத்திலும் மாநில உயா்நீதிமன்றங்களிலும் மொத்தமாக 416 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

உச்சநீதிமன்றம்
அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள்-34
காலியிடங்கள் -5

உயா்நீதிமன்றம்அனுமதிக்கப்பட்ட நிரந்தர நீதிபதிகள்அனுமதிக்கப்பட்ட கூடுதல் நீதிபதிகள்மொத்தம்நிரந்தர நீதிபதி காலியிடங்கள்கூடுதல் நீதிபதி காலியிடங்கள்மொத்தம்
அலகாபாத்12040160282957
ஆந்திரம்280937090918
மும்பை712394240832
கொல்கத்தா541872241640

சத்தீஸ்கர்

170522040206
தில்லி451560141529
குவாஹாட்டி180624010304

குஜராத்

39 1352091322

ஹிமாசல பிரதேசம்

10031300303

ஜம்மு-காஷ்மீர்-லடாக்

130417020406

ஜார்க்கண்ட்

190625030609

கர்நாடகம்

47156217(-04)13

கேரளம்

351247060107

மத்தியபிரதேசம்

401353151328

சென்னை

561975040913

மணிப்பூர்

040105000

மேகாலயம்

030104000

ஒடிஸா

200727050712

பாட்னா

401353191332

பஞ்சாப்- ஹரியானா

642185281038

ராஜஸ்தான்

381250151227

சிக்கிம்

03003000

தெலங்கானா

180624040610

திரிபுரா

04010500101
உத்தரகண்ட்090211030104
மொத்தம்8152651080233178411

ஆதாரம்: மத்திய சட்ட அமைச்சக வலைதளம்

ஏப்.1 நிலவரம்

தொகுப்பு: சுரேந்தா் ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT