சிறப்புச் செய்திகள்

கம்பத்தில் உத்தமுத்து கால்வாய் சீரமைப்பு

10th Sep 2020 10:44 AM | சி. பிரபாகரன்

ADVERTISEMENT

கம்பம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பாசன பரப்பளவு நன்செய் நிலங்களுக்கு தண்ணீர் வழங்கும் உத்தமுத்து கால்வாய் பணிகளை விவசாயிகள் சீரமைத்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது முதல் போக சாகுபடி நடைபெற்று வருகிறது.

இதில் உத்தமபாளையம் பாசன பரப்பளவில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள நன்செய் நிலங்கள் உள்ளன.

இந்த நன்செய் நிலங்களுக்கு கம்பம் தொட்டம்மன்துறை தடுப்பணையில் இருந்து தனியாக உத்தமுத்து கால்வாய் எனப்படும் கால்வாய் சுமார் 8 கிலோ மட்டர் தூரம் தண்ணீர் பயணித்து நிலங்களை அடைகிறது. 

ADVERTISEMENT

தற்போது உத்தமுத்து கால்வாயில் முழுவதும் செடி கொடிகள், ஆகாயத்தாமரை உள்ளிட்ட ஏராளமான செடிகள் மண்டிக் கிடந்தன.  இதனால் பாசன பகுதிகளுக்கு  தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

அதற்காக உத்தமுத்து கால்வாயில் கேஜ் வீல்கள் கொண்ட 4 டடிராக்டர் வாகனங்களை இறக்கி சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் உள்ள செடி, கொடி, ஆகாயத்தாமரை உள்ளிட்டவைகளை உத்தமபாளையம் நன்செய் விவசாயிகள் அகற்றினர்.

இதுபற்றி விவசாயி ஒருவர் கூறும்போது செடிகொடிகளை அகற்றிய பின்பு தண்ணீர் பாசன பரப்பு நிலங்களுக்கு சீராகச் செல்லும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT