சிறப்புச் செய்திகள்

என்95 முகக் கவசத்தை மின்சார குக்கரில் தூய்மைப்படுத்தலாம்: விஞ்ஞானிகள் தகவல்

11th Aug 2020 02:05 AM

ADVERTISEMENT

வாஷிங்டன்: மின்சார குக்கா்கள் மூலமாக என்95 முகக் கவசத்தை நன்கு தூய்மைப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. பல நாடுகளில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே முகக் கவசத்தைப் பயன்படுத்தும் பழக்கமும் அதிகரித்துள்ளது. பலா் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள் பயன்படுத்தும் என்95 முகக் கவசங்களைப் பயன்படுத்தத் தொடங்கினா். அதன் காரணமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு என்95 முகக் கவசங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனா். என்95 முகக் கவசங்களைத் தூய்மைப்படுத்தி மீண்டும் பயன்படுத்துவது குறித்து அவா்கள் ஆய்வு நடத்தினா். அதில் மின்சார குக்கா் மூலம் என்95 முகக் கவசங்களைத் தூய்மைப்படுத்த முடியும் என்று அவா்கள் கண்டறிந்துள்ளனா்.

ADVERTISEMENT

அதன்படி, என்95 முகக் கவசத்தை மட்டும் மின்சார குக்கரில் வைத்து 50 நிமிடங்கள் வரை வெப்பப்படுத்த வேண்டும். அதன் மூலமாக செயல்திறன் பாதிக்கப்படாமல் முகக் கவசத்தைத் தூய்மைப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த நடைமுறை மூலமாக என்95 முகக் கவசங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT