முக்கியச் செய்திகள்

அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

1st Nov 2020 12:19 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வேளாண்மைத் துறை அமைச்சா் துரைக்கண்ணு சனிக்கிழமை இரவு காலமானார்.

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் துரைக்கண்ணு ( 72) கடந்த அக்.13-ஆம் தேதி மூச்சுத் திணறல் பிரச்னையுடன் சென்னை ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது. மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு வந்தது. முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறையத் தொடங்கின. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு 90 சதவீதம் நுரையீரல் பாதிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறையத் தொடங்கியதால், செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவியுடன் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஏற்கெனவே, அவருக்கு இணை நோய்கள் இருந்ததால் உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்து வந்தது.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு காலமானார் என மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் உயிரிழக்கும் முதல் தமிழக அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

1948இல் தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் பிறந்த இவர், பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2006, 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

Tags : minister
ADVERTISEMENT
ADVERTISEMENT