தற்போதைய செய்திகள்

கிரிக்கெட் சூதாட்ட செயலியில் ரூ.90 லட்சம் இழந்த இளைஞர் தற்கொலை!

15th Apr 2023 03:38 PM

ADVERTISEMENT


கிரிக்கெட் சூதாட்ட செயலியால் ரூ.90 லட்சத்தை இழந்த கோவை இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் சபாநாகம்(35). இவர் கார் டீலர் தொழில் செய்து வருகிறார். 

இந்த நிலையில், சபாநாயகம் வெள்ளிக்கிழமை மதியம் கோவை காந்திநகர் பகுதியில் உள்ள ஓரு தனியார் ஹோட்டலில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். 

நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், அறையின் கதவை திறந்து பார்த்துள்ளனர். 

ADVERTISEMENT

அப்போது, அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர். சபாநாயகம் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

மேலும், காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அவர் ஆன்லைன் கிரிகெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததும், கிரிகெட் சூதாட்டத்தில் ரூ.90 லட்சம் வரை இழந்து அதிக கடனில் சிக்கியுள்ளதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. 

மேலும், தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT