தற்போதைய செய்திகள்

மாநில மொழிகளில் சிஏபிஎஃப் தேர்வு: பிரதமர் மோடி வரவேற்பு

15th Apr 2023 04:03 PM

ADVERTISEMENT

மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை மாநில மொழிகளில் நடத்துவதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மத்திய ஆயுதப்படையில்  ஆயுதப்படை காவலர் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மற்றும் நடைபெற்று வந்த நிலையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடிசா, அசாமி, பெங்காலி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கேணி என 13 மாநில மொழிகளில் நடத்த அனுமதி வழங்ப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பின் மூலமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள், தங்களுடைய தாய் மொழியில் தேர்வு எழுதுவதுடன் அவர்கள் பயன் பெறவும் உதவும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இந்த நிலையில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை மாநில மொழிகளில் நடத்துவதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் ஒருவரின் கனவை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

Tags : pm modi
ADVERTISEMENT
ADVERTISEMENT